DMK உயர்நிலை செயல்திட்டக்குழு ஆலோசனை கூட்டம்....
மக்களவை தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை என தகவல்...!
மக்களவை தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை என தகவல்...!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், நாடாளுமன்ற தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரச்சார யுக்திகள், கூட்டணி நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், திமுக-வின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.மக்களவை தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை என தகவல் வெளியானதை அடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் க.அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு..!