தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சிதம்பபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டிக்கும் வகையிலும் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் அதிமுக சார்பில் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை தமிழக அரசு சரியாக கையாளவில்லை என்று நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - இந்தியாவிலும் பீதியை கிளப்பும் HMPV வைரஸ்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்


இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் வயது வித்தியாசம் பார்க்காமல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. யார் அந்த சார் என்று கேட்டதும் இந்த அரசுக்கு அச்சம் ஏற்படுகிறது, பயப்பிடுகிறது பதட்டப்படுகிறது. இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புகின்ற போது காங்கிரஸ் கட்சியை வைத்து திசை திருப்ப முயற்சி செய்தனர். ஆளுநர் வெளிநடப்பு செய்து விட்டார். சட்டமன்றத்தில் படிக்கப்பட்டது ஆளுநர் உரையல்ல; சட்டப்பேரவை தலைவர் உரை. ஆளுநர் உரை என்பது தமிழகத்தில் பேரவை தலைவர் உரையாக மாறிவிட்டது.


அண்ணா பல்கலைக்கழகம்


அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஆளுநரைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்துகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடும் திமுக, தங்களது 40 எம்பிக்களை வைத்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு அல்லது பிரதமர் இல்லம் முன்பு போராட வேண்டியது தானே? டெல்லியில் போராடாமல் தமிழகத்தில் போராடி என்ன பயன். அதிமுக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் நாங்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டோம். ஆனால் திமுக போராட்டத்திற்கு காவல்துறை எப்படி அனுமதி அளித்தது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மறைக்கவும் மறக்கவும் செய்ய அரசு முயற்சி செய்கிறது.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல்


பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சந்திக்கும்போது ஏன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று சொல்லக்கூடிய திராணி தெம்பு தைரியம் ஏன் முதலமைச்சருக்கு இல்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுப்பார். பாஜக திமுக இடையே தான் கள்ள உறவு உள்ளது. தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பது போல காட்டும் திமுக டெல்லியில் பிரதமர் மற்றும்  மத்திய அமைச்சர்களை பவியமாக சந்தித்து இணக்கமாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றனர்.


திமுக இருப்பது இண்டியா கூட்டணி - ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட அழைப்பு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இருந்து யார் கள்ளத்தனமாக உறவு வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பது தெரியும் வரை பிரச்சனை ஓயாது. யார் அந்த சார் என்பது தெரியும்போது இந்த ஆட்சியே ஆட்டம் காணும் என்பதால் தான் திமுக ஆடிப் போய் உள்ளது என்றார்.


மேலும் படிக்க | HMPV Virus | பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் -தமிழக அரசு உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ