ஒரே நாடு நரே குடும்ப அட்டை திட்டத்திற்கு MK.ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஒரே நாடு நரே குடும்ப அட்டை திட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்!
ஒரே நாடு நரே குடும்ப அட்டை திட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்!
ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையை மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது. நாடு முழுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் நபர்களும் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்க முடியும். இந்த திட்டத்தை மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்று பெயர் வைத்து அழைத்து வருகிறது.
இந்நிலையில், ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இதில் தமிழக அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது. தமிழகத்தில் பொது விநியோக முறை மிக சிறப்பாக இருக்கிறது. இதில் இணைந்தால் அந்த முறையே பாதிக்கப்படும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில உரிமையை விட்டுக் கொடுத்து, பொது விநியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தபோது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு தமிழக அரசு முடிவு எடுக்கும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாகவும், தற்போது அந்த திட்டத்திற்கு காமராஜ் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது சந்தேகத்தை எழுப்புவதாகவும், மேலும், மாநில உரிமையை விட்டுக் கொடுத்து, “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.