சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், திமுக-வின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. 


கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் க.அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


DMK-வின் உயர்நிலை செயல்திட்டக்குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் குறித்து உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்தோம். யாருடன் கூட்டணி வைப்பது குறித்து விவாதித்தோம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை நடத்தி வருகிறோம். இது குறித்து தோழமை கட்சிகளுடன் விவாதிப்போம். தமிழகத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தல்கள் குறித்தும் விவாதித்தோம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.