தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இளைஞர் அணி மாநில அமைப்பாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,  கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டிற்கு நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அமைச்சரே உதயநிதி ஸ்டாலினிடம்  வழங்கினார்.  இதை தொடர்ந்து மாவட்ட இளைஞரணி சார்பில் 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.  மேலும் இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'இவர்கள் ராவணன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்' உதயநிதிக்கு எதிராக புகார்..! விரைவில் விசாரணை


இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இளைஞர் அணி மருத்துவர் அணி சார்பாக உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தோம் மூன்று நாட்களில் வெகு சிறப்பாக எழுச்சியோடு உணர்வுபூர்வமாக தமிழ்நாடு முழுவதும் நடத்தி காட்டிய இளைஞரணி தம்பிமார்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேலத்தில் நடக்கக்கூடிய மாநாட்டில் அனைத்து இளைஞர்களும் பங்கேற்க வேண்டும், கடந்த இருபதாம் தேதி மதுரையில் நடந்த மாநாடு போல் இருக்கக் கூடாது என்பது ஒரு எடுத்துக்காட்டு. மறுநாள் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த கட்சியினுடைய வரலாறு பற்றி பேசப்பட்டுள்ளதா? தமிழ்நாடு உடைய பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளதா? என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்? ஆடல் பாடல், மிமிக்ரி, பட்டிமன்றம், தயிர்சாதம் நன்றாக இருக்கிறதா? புளி சாதம் நன்றாக இருக்கிறதா? என்ன மாநாடு நடத்தி இருக்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினர். 


மேலும் பேசும்போது நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற மாநாட்டின் பெயர் சனாதன எதிர்ப்பு மாநாடு இந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு பேசினேன். டெங்கு மலேரியா காலரா, என்பதை எப்படி ஒழிக்கவோமோ அதே போல் சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என மேடையில் பேசினேன். நான் பேசிய பேச்சு வெளியே போனது பல பெயரின் வயிற்றெரிச்சல் அதிகமாகும் என கூறினேன் அதே நடந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷா பிஜேபி தலைவர் நட்டார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மேலும் இந்தியா முழுவதும் தன் மீது புகார் அளிக்கப்பட்டு வருகின்றனர்.  இன்று ஒரு சாமியார் எனது தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். சொன்னது ஒரு சாமியார் என் தலை மீது உனக்கு என்ன ஆசை. சாமியாரிடம் எப்படி பத்து கோடி உள்ளது நீங்கள் சாமியாராக போலி சாமியாரா. ஒரு சீப்பை கொடுத்தால் நானே சீவிக்கொள்வேன் சொல்லிய போது நீ 100 கோடி கொடுத்தாலும் என் தலையில் நானே செய்து கொள்ள முடியாது என கூறினார்.


இதனை தொடர்ந்து தென்காசிக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.  தென்காசியில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உதயநிதி ஸ்டாலின் இரவு குற்றாலத்திற்கு வருகை தந்தார். முன்னதாக அவருக்கு ஆலங்குளத்தில் வைத்து மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் திரளான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


மேலும் படிக்க | 'சேகர்பாபு அமைச்சர் பதவியில் விலக வேண்டும்' - கெடு விதித்த அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ