புதுடெல்லி: தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் குற்றம் நடந்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்சென்ற போது, அந்த 4 பேரும் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவர்களை தடுக்க சென்ற போலீசார் மூது குற்றவாளிகள் கற்களை வீசியுள்ளனர். இதனால் தப்பிக்க முயன்ற நான்கு பேரையும் என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுத்தள்ளினர். இந்த சம்பவத்தை பலர் வரவேற்றாலும், மறுபக்கம் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் குற்றவாளிகள் கொல்வது தான் தீர்வா? பிறகு எதற்கு நீதிமன்றமும், சட்டமும் என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக திமுக எம்.பி. கனிமொழி, "நான்கு பேரையும் துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் சுட்டுக்கொன்றது பலருக்கு மகிழ்சியாக இருக்கிறது. அதை பார்த்தால் நியாயம் கிடைத்தது போன்ற உணர்வு வருகிறது. ஆனால் அதேவேளையில், இதற்கு தீர்வா என்கவுண்டர் தான்? என்றும் கேள்வி எழுகிறது எனக் கூறியுள்ளார்.


அதேபோல, தெலங்கானா என்கவுண்டர் பற்றி பேசிய காங்கிரஸ் தலைவர் ஹுசைன் தல்வாய், இது தவறு. இதை ஆதரிக்க முடியாது. காவல்துறையினர் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்வதையும் அதை கேலி செய்வதையும் ஆதரிக்க முடியாது. குற்றம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும். சிலர் என்கவுண்டரை ஆதரிப்பதால் அது சரி என்று சொல்ல முடியாது. சிலர் கொலை செய்வதை ஆதரிக்கிறார்கள் என கடுமையாக சாடினார். 


 



அதபோல பாஜக தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி, இதுபோன்ற என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். 


 



நீதித்துறை மூலம் தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்று குடிமக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என தெலுங்கானா என்கவுண்டர் குறித்து காங்கிரெஸ் கட்சியை சேர்ந்த குமாரி செல்ஜா தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம் 27 ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பணி முடிந்து இரவு வீடு திரும்பும் போது உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த விசாரணையில் உண்மையை கண்டறிய குற்றவாளிகளை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பெண் டாக்டரை எரித்து கொன்ற இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, அந்த இடத்திலேயே குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.