தமிழக நலன் மற்றும் இலங்கை தமிழர் நலன் குறித்து பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக நலன் மற்றும் இலங்கை தமிழர் நலன் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை திமுக எம்.பி-க்கள் பிரதமரிடம் வழங்கினர்.
புது டெல்லி: தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தனது கடிதத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அவர் மொத்தம் 16 கோரிக்கைளை பட்டியலிட்டு, அதன் நியாயமான காரணங்களை மேற்கோள் காட்டி கூட்டுறவு கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் உதவிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
அவர் பட்டியலிட்ட கோரிக்கைகள்:
1. மாநில உரிமை மீட்க அரசியல் சட்டத்தை திருத்திடுக.
2. நீட் தேர்வு
3. மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சனை.
4. புதிய கல்விக் கொள்கை.
5. மத்திய அரசு பணிகள், அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 90% இட ஒதுக்கீடு.
6. இதர பிற்படுத்தப்பட்டோர் இட இதுகீட்டை 50% அதிகரித்திடுக்க.
7. எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைத்திடுக.
8. கடல்நீரை குடி நீராக்கும் புதிய திட்டத்தை அமைத்திடுக.
9. நதி நீர் இணைப்பு.
10. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்.
11. சேலம் உருக்கு ஆலையை தனியார் மயமாக்குதலை நிறுத்துக.
12. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கைவிடுக.
13. மகளீர் இட இதுக்கீடு மாசோதாவை நிரைவேற்றிடுக.
14. ஈழத்தமிழர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுக
15. 15வது நிதி ஆணையம்
16. நிலுவையில் உள்ள மத்திய நிதியை வழங்கிடுக.
இதுபோன்ற கோரிக்கைளை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை, திமுக எம்.பி-க்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பிரதமரிடம் வழங்கினார்கள்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.