வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து, காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். 


இந்நிலையில், இன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கல்லீரல் செயல்பாடு குறைந்து வருவதாகவும், இதனால் மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானதையடுத்து காவேரி மருத்துவமனைக்கு திமுக தலைவர் மனைவி தயாளு அம்மாள் வந்திருந்தார். 


தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார். இவர் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுவோம் எனக் கூறியிருந்தார். பின்னர் காவிரி மருத்துவமனைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கருணாநிதி குடும்ப மருத்துவர் வருகை தந்துள்ளார்.



இந்நிலையில், தற்போது காவேரி மருத்துவமனை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், கருணாநிதியின் உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.