சென்னை: கோவை சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வரதமாநகராட்சி உயர்நிலையில் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கலந்துக்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்பொழுது சிறப்பு குறை தீர் கூட்டத்தில் கலந்துக்கொள்ள, அந்த தொகுதியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக்கை மற்றும் அவருடன் நூற்றுக்கு மேற்ப்பட்ட திமுகவினர் கோரிக்கை மனுக்களை கொண்டு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் திமுக மட்டும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவத்தை அறிந்த தமிழக எதிர்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்ததுடன், சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு தி.மு.க. தக்க பாடம் கற்பிக்கும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கும் வகையில் கூறியுள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "வேலூரில் திமுக எம்எல்ஏ-வை ஆளும் கட்சி மிரட்டியதுபோல், கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற திமுக எம்எல்ஏ கார்த்திக் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி MLA-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை?


சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்.


இவ்வாறு பதிவிட்டுள்ளார்.