சென்னை: முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 அடி உயர உருவ சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். மேலும் அதனுடன் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து உரையாற்றிய ஸ்டாலின், "கலைஞர் ஆற்றியுள்ள பணிகளை நினைவு கூறும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கலைஞர் சிலைகள் திறக்கப்படுகின்றன. திமுக எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.களும் தனது தொகுதிகளில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


 



மேலும் கலைஞர் கணினி கல்வியகம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, படித்த பட்டதாரிகளுக்கு, வேலையில்லாமல் இருக்கும் பெண்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.


கலைஞர் கருணாநிதிக்கு சிலை ஊர் தோறும் திறக்கப்பட காரணம், அவருக்கு பெருமை தேடி தருவதற்காக இல்லை. அவரின் உழைப்பு, அவர் ஆற்றியுள்ள பணிகளை குறித்து எடுத்துகாட்டும் விதமாக தான் சிலை திறக்கப்படுகிறது எனக் கூறினார். 


தொடர்ந்து பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் திமுக கூட்டணி பெரும்பான்மையை வென்றுள்ளோம். உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில், ஆளும் அரசு ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை நாங்கள் முன்னிலை வகித்துள்ளோம் எனவும் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மா. சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.