நெடுஞ்சாலை ஒப்பந்தம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நேற்றைய தினம் தஞ்சாவூரில் கழக உறுப்பினர் இல்ல திருமணவிழாவில் பங்கேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின்... "திமுக-வை கம்பெனி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகின்றார். கம்பெனி என்பது கவுரவமானது தான். ஆனால் ஆதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம். அதில் எடப்பாடி பழனிசாமி ஓரு விசித்திரமான பபூன்; டெல்லியில் உள்ள மோடி மஸ்தான் ரிங் மாஸ்டர்" என தெரிவித்தார்.


இந்த கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தெரிவிக்கையில்...


"சர்க்கஸ் கூடாரத்தில் திறமையானவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். சாதாரணமாக யாரும் பங்கேற்க முடியாது.


அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் சம்பள உயர்வை வழங்கி உள்ளோம். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


நெடுஞ்சாலை ஒப்பந்தம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார். கட்சிக்குள் பிரிவினையை உண்டாக்கும் ஸ்டாலினின் முயற்சி தோல்வி அடைந்தது என்னும் மனவிரக்தியில் அவர் இவ்வாறு கூறிவருகின்றார்.


திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டெண்டர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ஸ்டாலின் எந்த பதிலும் கூறவில்லை... திமுக கட்சி அல்ல… கம்பெனி என்பதை ஒப்புக்கொண்ட ஸ்டாலினுக்கு நன்றி." என தெரிவித்துள்ளார்.