மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் எங்கு அஞ்சலி வைக்கப்படுகிறது
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் குடும்பத்தாருக்கும், பொதுமக்களுக்கும் அஞ்சலி வைக்கப்படுவதை குறித்து திமுக அறிக்கை வெளியிட்டு உள்ளது.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணி அளவில் காலமானார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று இரவு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரத்தில் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை வைக்கப்படும். அதன் பிறகு சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரை வைக்கப்படும். அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு உடல் கொண்டு வரப்படும். அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடம் ஒதுக்க முடியாது எனவும், பல சட்ட சிக்கல்கள் உள்ளது. காமராஜ் நினைவகம் அருகே 2 ஏக்கர் நிலம ஒதுக்கப்டும் என தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பல இடங்களில் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தமிழக அரசின் முடிவை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அவசர வழக்காக இன்று இரவு 10.30 மணிக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.