அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டு வருவதாக கூறி நடிகர் ராதாரவி திமுக-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகில் அடிக்கடி சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனையில் சிக்கி வருபவர் நடிகர் ராதா ரவி அவர்கள். சமீபத்தில் இவர் நடிகை நயன்தாரா குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குறிய கருத்தை அடுத்து, அவர் திமுக-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.


நேற்று முன்தினம் நடைப்பெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய, மூத்த நடிகர் ராதா ரவி, நடிகை நயன்தாரா பற்றி மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசினார். இவரது கருத்திற்கு பலரும் தங்களுடைய கண்டனத்தை பதவி செய்தனர்.



மேலும் நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கோபமாக சில பதிவுகளை பதிவிட்டார். ஒரு பழம்பெரும் நடிகர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இழிவான வகையில் ஒருவரை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு எதிராக எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரிய என குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில், அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டு வருவதாக கூறி நடிகர் ராதாரவி திமுக-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என கழக பொதுச்செயலாலர் அன்பழகன் அறிவித்துள்ளார்.



முன்னதாக திரைப்பட விழாவில் பேசிய ராதா ரவி தெரிவித்ததாவது., "தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்" என சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.