அமோக வெற்றி பெற்று கோட்டையை பிடிக்கிறது திமுக: கருத்துக்கணிப்புகளில் clean sweep
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவுக்கப்பட்டுள்ளன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் மே 2 ஆம் தேதி வரவுள்ளன.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று பல்வேறு கருத்துக்கணிப்பு அமைப்புகளால் வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் (Exit Polls) தெரிவுக்கப்பட்டுள்ளன.
சில முக்கிய கருத்துக்கணிப்பு முடிவுகள் பின்வருமாறு:
- ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 160-170 இடங்களைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக-வுக்கு 4-6 இடங்களும், மக்கள் நீதி மய்யத்திற்கு 0-2 இடங்களும் கிடைக்கும் என தெரிகிறது.
- சாணக்யா கருத்துக்கணிப்பில் திமுக-வுக்கு 175 ± 11 இடங்களும் அதிமுக-வுக்கு 57 ± 11 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- பி-மார்க் கருத்துக்கணிப்பு திமுக-வுக்கு 165-190 இடங்களும் அதிமுக-வுக்கு 40-65 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது.
அனைத்து கருத்துக்கணிபுகளிலும், திமுக (DMK) அதிக வித்தியாசத்துடன் வெற்றி பெறுவதை கண்கூடாகக் காணமுடிகிறது. அதிமுக-வுக்கு கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தரும் நிலையிலேயே இருக்கின்றன. பொதுவாக, வெவ்வேறு கருத்துக்கணிப்புகளில் சில வித்தியாசங்கள் இருப்பதை காண்பது வழக்கம். எனினும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை, அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஒரே மாதிரியாக திமுக-வையே வெற்றியாளராக காண்பிக்கின்றன.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான தேர்தலாக இருந்தது:
- அதிமுக தலைவர் ஜே.ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி இல்லாமல் பல தசாப்தங்களுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இதுவாகும்.
- இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் (Tamil Nadu) ஆளும் அரசாங்கம் செய்துள்ள நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்துள்ள பெரும் அங்கீகாரமாக பார்க்கப்படும். மேலும், இது பாஜக-வுக்கு தமிழகத்தில் ஒரு நிலையான இடத்தைப் பெற ஒரு நல்ல வாய்ப்பையும் அளிக்கும்.
-திமுக வெற்றி பெற்றால், முக. ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராவார். நீட் தேர்வு, தூத்துக்குடி போராட்டம் என மக்கள் விரோத நடவடிக்கைகள் பல அதிமுக ஆட்சியில் நடந்துள்ளன என கோரி வாக்குக்கேட்ட திமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR