நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் பொதுசிவில் சட்டம், ஆளுநரின் அத்துமீறல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக, மத்திய பாஜக அரசின் வெறுப்பு அரசியல் காரணமாக இந்தியாவின் சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மணிப்பூரில் சட்ட ஒழுங்கை காப்பாற்றிவிட்டு, தமிழகம் குறித்து பேசுங்கள் - ஆ. ராசா


கடந்த  9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு எதையும் செய்யவில்லை என தெரிவித்துள்ள திமுக, தமிழகத்துக்கு பாஜக செய்த அநீதிகளை பட்டியலிட்டுள்ளது. மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டும் ஜிஎஸ்டி இழபீடு பறிக்கப்பட்டிருப்பதாகவும், மின் கட்டணத்தை ஏற்றும் உதய் மின் திட்டத்தைக் கொண்டு வந்து மக்களுக்கு இன்னல்களை கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒற்றைச் செங்கல்லுடன் இருப்பதாக தெரிவித்துள்ள திமுக, தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநரை நியமித்திருப்பதாக கூறியுள்ளது. இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.


ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமை, மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு மற்றும் மானியங்களை மத்திய பாஜக அரசு குறைத்திருப்பதாகவும், நிதி ஆணையத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியின் அளவையும் குறைத்திருப்பதாக கூறியுள்ளது.  மேலும், மெட்ரோ திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் இழுத்தடிப்பு செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ள திமுக, ரயில்வே திட்டங்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டை மத்திய பாஜக புறக்கணித்திருப்பதாக கூறியுள்ளது.


தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதற்காகவே நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அலுவலங்களில் ரயில்வே உட்பட எந்த துறையிலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைக்கு அமர்ந்துவிடக்கூடாது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. தமிழ் மொழியை அடியோடு புறக்கணித்திருப்பதுடன், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மடியில் வைத்து மத்திய பாஜக அரசு தாலாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள திமுக, தமிழ் மீது அக்கறைபோல் மாயத்தோற்றத்தை உருவாக்கி தமிழ் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தமிழில் கூட எழுத விடாமல் தடுக்கிறது என கூறியுள்ளது.


சமூகநீதி அடிப்படையில் நீதிமன்றங்களில் கூட நீதிபதி நியமனங்கள் நடைபெறவில்லை என தெரிவித்திருக்கும் திமுக, கடந்த 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு தேவையான நிதி உள்ளிட்ட எந்த திட்டத்தையும் கொடுக்கவில்லை, அரசுப் பணிகளிலும் தமிழர்களுக்கு இடமில்லை என்ற நிலையை மட்டுமே உருவாக்கியிருப்பதாக திமுக கூறியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பவது என திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | எடப்பாடியார் சாதனை படைத்தார்! முக ஸ்டாலின் என்ன செய்தார்? ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ