திமுக-வில் தன்னை மீண்டும் இணைக்காவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என MK அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் 4-வது நாள் அலோசனை கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த MK அழகிரி அவர்கள் தெரிவிக்கையில்...


"கலைஞர் இல்லா கட்சியை காப்பாற்ற நாங்கள் களத்தில் குதித்துள்ளோம். 2014-ஆம் ஆண்டிற்கு பின்னர் வெற்றியை பெறாத திமுக-வில் மீண்டும் தன்னை இணைக்காவிட்டால், கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என தெரிவித்துள்ளார்.


மறைந்த தலைவர் கலைஞர் அவர்களால் கடந்து 2014-ஆம் ஆண்டு திமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர் MK அழகிரி. தற்போது கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நல குறைவால் மறைந்ததை அடுத்து தற்போது மீண்டும் தன்னை கட்சியில் இணைக்குமாறு MK அழகிரி அவர்கள் முறையிட்டு வருகின்றார். 


தன்னை கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியும், திமுக-வில் தனக்கு உள்ள ஆதரவினை நிறுபிக்கும் பொருட்டும் வரும் செப்., 5-ஆம் நாள் தனது ஆதரவாளர்களுடன் கலைஞரின் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார் அழகிரி அவர்கள். இந்த பேரணியில் சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் பக்கேற்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.



இதற்கிடையில் நேற்று திமுக தலைமை பொருப்பிற்கு திமுக செயல் தலைவர் MK ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்து, ஒருமனதாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.


இந்நிலையில் இன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஆலோசனை கூட்டம் நடத்திய MK அழகிரி அவர்கள்.. நடைபெறவிருக்கும் அமைதி பேரணி தன்னை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்பதினை வளியுறுத்தியே என குறிப்பிட்டுள்ளார்.