அதிமுக ஆட்சி நீட்டிக்க வேண்டும் என்பதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை 2019-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான வரைவை தயாரிக்கும் பணியல் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. புதிய கல்வி கொள்கை வரைவில், மும்மொழிக் கல்வி கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


இந்த மும்மொழி கொள்கையானது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம், வேறு இந்திய மொழி என்பதாகும். இதில், இந்தியைத் தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், ஏதேனும் இந்திய மொழிகளில் இந்தியை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என வரைவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழகத்திற்கு இந்தி மொழி கொண்டுவரப்பட்டால் தி.மு.க., அதனை கட்டாயம் எதிர்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.