மாரிதாசை போல் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? சி.வி.சண்முகம்!
மாரிதாசை கைது செஞ்ச நீங்க அண்ணாமலையை கைது செய்ய முடியுமா என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.
விழுப்புரத்தில் இன்று ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது, ஆளும் திமுக ஏழு மாதத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த சட்டமன்ற பேரவை கூட்டத்தில் துறை வாரியாக நீதி ஒதுக்கப்படது. ஆனால் அனைத்தும் பேப்பரில் தான் உள்ளது. இவர்கள் ஆட்சியில் இரண்டு திட்டம் நிறைவேற்றியுள்ளது.
ALSO READ | சாத்தான்குளம் கொலையில் ஆவணங்கள் மாற்றம் - போலீஸ் சாட்சியம்
ஒன்று தனது தந்தைக்கு சமாதிகள் நிதி ஒதுக்கியது. இரண்டு மதுரையில் தந்தை பெயரில் நூலகம் கட்ட நிதி ஒதுக்கியது மட்டுமே. எதிர்கட்சியாக இருந்த போது கொராணா நோய் பாதிக்கப்பட்டு இறந்த குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்றார் ஸ்டாலின். ஆனால் இவரது ஆட்சியில் நீதிமன்றம் உத்தரவின்படி ரூபாய் ஐம்பதாயிரம் கூட தரவில்லை. இவரது அமைச்சர் அவையில் உள்ள 23 அமைச்சர்கள் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. லஞ்ச ஒழிப்பு துறையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் நல்லவர்களா. அவர்கள் யாரும் லஞ்சம் வாங்காத யோக்கியமாணவர்களா.
ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் அப்போது லஞ்ச ஒழிப்பு இந்த அதிகாரிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் ஏ. வ. வேலு திமுக கட்சி காண்டாக்டராக வலம் வந்து வசூல் செய்து ஸ்டாலினிடம் கொடுக்கின்ற வேலையை தான் செய்து வருகிறார். திமுக அரசு ஸ்டாலின் மனைவி, உதயநிதிஸ்டாலின், மருமகன் சபரீசன் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கொள்ளையர்கள் நகரமாக மாறியது வருகிறது.
இவர்கள் ஆட்சியில் தமிழகத்தில் தற்போது சிறுமி முதல் வயதான பெண்கள் பாலியல் பலாத்காரம் சர்வசாதாரணமாக நடக்கிறது. ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் இதனை மூடி மறைத்து வருகிறார்கள். மாரிதாசை கைது செய்த நீங்கள் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா என பாஜகவிற்கு ஆதரவாக கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | தமிழக அரசின் மாநிலப் பாடலாக ’தமிழ்த்தாய் வாழ்த்து’ அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR