ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் தெரியுமா.? மத்திய அரசை அறிவுறுத்திய கனிமொழி.!
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் பொது நோக்குடன் செயலப்பட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் 2 சிறார்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் இந்த சிறந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொடர்ந்து செய்தியாளர்களை சந்துத்து பேசினார். அப்போது, மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 225 கோடி செலவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது எனவும், மருத்துவ செலவுகளுக்கு அஞ்சும் தயக்கத்தை மக்கள் மத்தியில் இருந்து போக்க வேண்டும் எனவும் கனிமொழி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புவுணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார். மேலும், இன்று நீட் தேர்வு எழுதாமல் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய மருத்துவர்களிடம், சிகிச்சை பெற இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் தமிழகம் வருவதாக குறிப்பிட்ட கனிமொழி, அனைவருக்கும் மருத்துவக் கல்வி படிக்கக் கூடிய உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அதை மத்திய அரசு நீட் என்ற தேர்வு மூலம் தடுக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நிறைவேற்றி உள்ள தீர்மானத்தின் மீது ஆளுநர் தனது சுயகாரணம், மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை நீக்கி வைத்து விட்டு பொதுநோக்குடன் செயல்பட வேண்டும் எனவும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அனைவருக்கும் சமூக நீதி என்பதை பின்பற்றி செயல்படுவதே நல்ல அரசாக இருக்கும் என மத்திய அரசை அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க | மாணவர்களை அவமதித்தால்..! எச்சரிக்கும் வகையில் நடவடிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR