அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கும்வரை சுயேச்சைகளுக்கு தற்போதைக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அமமுகவுக்கு பொதுச்சின்னம் ஒதுக்க இருப்பதால், அக்கட்சி வேட்பாளர்களுக்கு சுயேட்சைக்கான சின்னம் ஒதுக்க வேண்டாம் என்று தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வழங்கக்கோரி டிடிவி தினகரனின் அமமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், கட்சியாக பதிவு செய்யாத அமமுகவுக்கு பொதுவாக ஒரு சின்னம் ஒதுக்க முடியாது,குறிப்பாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்தது.


எனினும், அமமுக வேட்பாளர்களுக்கு பொதுவாக ஒரு சின்னம் ஒதுக்க உச்ச நீதிமன்றம் நேற்று தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. நேற்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளதால், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், இன்று மாலைக்குள் அமமுகவுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையமே ஒதுக்கும் என்பதால், அமமுக வேட்பாளர்களுக்கு சுயேட்சைகளுக்கான சின்னங்களை தற்போது ஒதுக்க வேண்டாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.