போதையில் கார் ஓட்டி விபத்து; ஆட்டோ டிரைவர் பலி
சட்டக்கல்லூரி மாணவர் போதையில் காரை ஓட்டி விபத்து. ஆட்டோ டிரைவர் பலியானார்.
சென்னையில் உள்ள கதீட்ரல் சாலையில் ஆட்டோவில் டிரைவர் துாங்கிக் கொண்டு இருந்தனர். போதையில் அந்த வழியாக காரை ஓட்டி வந்த சட்டக் கல்லுாரி மாணவர் விகாஸ் விஜயானந்த் (வயது22) ஆட்டோக்கள் மீது மோதினார். அவரது கார் மோதியதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. விகாஸ் ஓட்டி வந்த காரும் சேதமடைந்தது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் டிரைவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களில் 9 பேர் காயம் அடைந்தனர்.
அந்த கார் மெரீனா படுவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. காரில் விகாசும், அவனது நண்பரும் இருந்து உள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் ஐஸ்வர்யா என்ற இளம்பெண் போதையில் ஆடி காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதில், கூலி தொழிலாளி ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.