காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் முதல்நிலை காவலர் மோகன். இவர் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியிலுள்ள புறக்காவல் நிலையத்தில் இரவு பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்.  இந்த நிலையில் இன்று சனிக்கிழமை பெரும்பாலான அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால்‌ திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் ஏற்காடு சுற்றுலா சென்றிட காஞ்சிபுரத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் பொன்னேரிக்கரையிலுள்ள புறகாவல் நிலையம் அருகே வாகன வருகைக்காக நேற்று இரவு காத்திருந்துள்ளனர்.  அப்போது அங்கு புறகாவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலர் மோகன் அங்கு அமர்ந்திருந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் எதற்காக இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்க, அவர்கள் ஏற்காடு சுற்றுலாச்செல்ல அமர்ந்திருப்பதாக சொல்ல, அதுக்கு எதுக்கு டா இங்கு உட்காந்து கொண்டிருக்கிறீர்கள் என ஒரு ஒருமையில் கேட்ட நிலையில் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருமையில் பேசியதை கேட்டிருக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 2024 பொதுத்தேர்தலுக்கான வியூகம்! கையுடன் கைகோர்க்கும் எதிர்கட்சிகளும் விமர்சனங்களும்


அப்போது நீ என்ன பெரிய இவனா என கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி SP,DIG யார் கிட்ட வேணுமானலும் பேசு என கூறி குடிபோதையில் தள்ளாடியபடி அலப்பறையில் ஈடுபட்டிருக்கிறார்.  இதனால் காவலர் மோகனிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் வாக்குவாதம் செய்த நிலையில் ஏற்காடு செல்வதற்காக திருவள்ளூரிலிருந்து வேனில் வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் 10க்கும் மேற்பட்டோர் என்ன பிரச்சனை,என்ன ஏது நடந்தது என கேட்ட நிலையில் அவர்களையும் காவலர் மோகன் தரக்குறைவாக பேசியிருக்கிறார்.இதனால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகரை தொலைப்பேசியில் அழைத்து இச்சம்பவம் குறித்து தகவல் சொன்னதாக கூறப்படுகின்றது.



இதனையெடுத்து மாவட்ட காவல் கண்காணிபாளர் உடனடியாக வாக்கிடாக்கியில் இது குறித்து தகவல் தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக போலீசார் விரைந்து சென்று இரவு பணியிலிருந்த காவலர் மோகனை மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அவருக்கு மதுபோதை பரிசோதனையானது செய்யப்பட்டது. இரவு நேரப் பணியில் இருந்த காவலர் குடிபோதையில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அலப்பறையில் ஈடுபட்டதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  ஏற்கனவே இவர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில்,பணியிலிருந்த போதே மது அருந்திவிட்டு இதே போல் பிரச்சனையில் ஈடுபட்டதாக இரண்டு முறை பணிநீக்கம் செய்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் தான்  மீண்டும் பணியில் சேர்ந்து இவர் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க | இந்தியாவில் முதலீடு: பிரதமர் மோடி அழைப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ