புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற  தேர் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் ஆறு பக்தர்கள் மற்றும் இரண்டு கோவில் தற்காலிக பணியாளர்கள் ஆகிய எட்டு பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தேர் விபத்து நடந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து தேர் நடந்த விபத்தை ஆய்வு செய்து அவர்களிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்டு அறிந்தார்.


இதன் பின்னர் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 நபர்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியது தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட தலா 50,000 ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.


இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தேர் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி கண்ணன் ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், விசாரணை அறிக்கையில் தவறு இருந்தால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.


சிகிச்சை பெற்று வரும் எட்டு நபர்களுக்கு தல ஐம்பதாயிரம் ரூபாய் தமிழக அரசு சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் எட்டு நபர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மகனின் படுகொலைக்கு நீதி கேட்ட தாய்க்கு 100 கசையடி; நீதிமன்றம் வழங்கிய கொடூர தீர்ப்பு


இனி, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும்  எனவும், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான கோவில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது, ஒரு சில தேரோட்டத்தில் மட்டும் தான் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது இந்த நிகழ்வுகளும் நடக்காமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். 


பொதுப்பணித்துறை தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பில் ஆய்வு செய்து தேர் குறித்து நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். முதல் தகவலின் அடிப்படையில் இரண்டு தற்காலிக பணியாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இறுதி விசாரணையில் இது யாருடைய கவனக்குறைவு என்று தெரிய வந்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மேலும் படிக்க | LPG Price Today 1 August 2022: கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ