காலையில் வாக்கிங் செல்வதற்கே பயமாக இருக்கிறது - செல்லூர் ராஜு!
Sellur Raju Madurai: 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள். `Wait and see` என செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.
Sellur Raju Madurai: மதுரை கோச்சடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், "திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார். மதுரையில் நடை பயணம் வாக்கிங் செல்வதற்கே பயமாக இருக்கிறது. ஏப்பா நீங்க எல்லாம் வாக்கிங் போகாதீங்க பா. வாக்கிங் போனீங்கன்னா இடைத்தேர்தல் வந்துரும். அதுலயும் திராவிட மாடல் ஜெயிச்சிட்டோம்னு சொல்லுவாங்க. அடிக்கடி அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் அரசியல் தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் ரவுடிசம் அதிகரித்துவிட்டது.
மேலும் படிக்க | என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலு
மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைப்பயிற்சிக்கு செல்ல கூட மக்கள் அச்சப்படுகின்றனர். தமிழகத்தில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் டாக்டர் சரவணனை வானளாவ புகழ்ந்து பேசி வாக்கு கேட்டோம். ஆனால், மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளை செலுத்தியுள்ளனர். யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும். அதிமுக மீண்டும் அரியணை ஏறும். எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் 4.5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். 2026ல் எடப்பாடி பழனிச்சாமியின் சாணக்கியதனத்தை பார்க்கப்போகிறீர்கள்" என்றார். சசிகலா சுற்றுப்பயணம், அதிமுக பிளவுகள், ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, "Wait and see" என பதிலளித்தார்.
பத்திரிகையாளர்கள் மீது எஸ் பி வேலுமணி ஆவேசம்
அனைத்து பத்திரிகையாளர்கள் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என காட்பாடியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11.07.2024 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி வேலுமணி இன்று காட்பாடி விருதம்பட்டு காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்க்கு சென்று உயிரிழந்தவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் வேலுமணியிடம் செய்தியாளர்கள் காவிரி தொடர்பான பிரச்சனை குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சென்றார். பத்திரிகையாளர்களைப் பார்த்து பயந்து போவது என மீண்டும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எஸ்.பி.வேலுமணி பத்திரிகையாளர்கள் பார்த்து நான் பயப்படுவதில்லை அனைத்து ஊடகங்களும் ஜால்ரா அடிக்கிறீர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதை எப்பொழுது போட்டீர்கள் என்று ஆவேசமாக கூறிவிட்டு காரில் வேகமாக நடுவிச் சென்றார்.
மேலும் படிக்க - உண்மை கொலையாளிகள் யார்? புதிய சிசிடிவி காட்சி வெளியானது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ