வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தென்மேற்கு வங்கக்கடலில் ஃபென்சல் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. குறிப்பாக தமிழத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்தது. திருவண்ணாமலையில் பலரும் வீடுகளை இழந்து பெரிதும் சிரமப்பட்டனர். தமிழகத்தை தாண்டி புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ மழையும், புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 49 செ.மீ மழையும், காரைக்காலில் 16.9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. எதிர்பார்த்ததை விட புதுச்சேரியில் அதிக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 மேலும் படிக்க | 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! இந்த பகுதியில் அதிக மழை இருக்கும்!


அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் வெள்ளத்தில் நாசமானது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு படகில் சென்று வீடுகளில் சிக்கியிருந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை அரசின் உதவியுடன் மீட்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண உதவிகளை அறிவித்தார். இது அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நிம்மதியை தந்தது. அதனபடி மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.


மேலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்றார். மழையில் விளை நிலங்களில் பயிர் சேதம் அடைந்து இருந்தால் ரூ. 10,000 வழங்கப்படும். கூரையுடன் கூடிய வீடுகள் சேதமடைந்து இருந்தால் ரூ.10,000 வழங்கப்படும். ஒரு மாட்டுக்கு ரூ.40,000, கன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும். மழையால் சேதமடைந்த படகுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் எப்போது நிதி உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.


அடுத்த சில தினங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 செலுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மொத்தம் 3 லட்சத்து 54 ரேஷன் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.177 கோடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு-வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் இலங்கை மற்றும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூ, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 மேலும் படிக்க |  கனமழை எச்சரிக்கை! இன்று இந்த மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ