சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஆரிய மோட்டூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட துரைமுருகன் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் தரக்குறைவாகப் பேசினால், அவர்களை தாக்குங்கள் என்றும், அவர்கள் பணியடை நீக்கம் செய்யப்படுவர் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். 


இதைத்தொடர்ந்து,  அவரது கருத்துக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக திரண்டப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்கும் வரை பேருந்துகளை இயக்கமாட்டோம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


ALSO READ | 9 மாவட்டங்களில் மது கடைகளுக்கு விடுமுறை!


தகவல் அறிந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாளர் பணிமனைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பேருந்துகளை இயக்கத் தொடங்கினார்.


இதே போல், மற்றொறு பிரச்சார கூட்டத்தில் எம்.ஜி.ஆரை துரோகி என விமர்சித்திருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. 


"எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இவரின் இந்த கருத்துக்கு ஓபிஎஸ் நாவடக்கம் தேவை எனவும், எம்.ஜி.ஆரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்று என முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் கருத்து தெரிவித்துள்ளனர். துரைமுருகனின் இந்த பிரச்சாரம் வேலூர் மாவட்ட வாக்காளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


ALSO READ | ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடும் கட்டுப்பாடு விதித்த மாநில தேர்தல் ஆணையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR