வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே  தமிழக ஆந்திர எல்லை கிராமம் பெருமாள்பள்ளி பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி தர்மராஜா கோவில் உள்ளது இங்கு 70 வது ஆண்டாக துரியோதனன் படுகள போர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக எல்லை கிராமத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் போர் (வதம் செய்யும்  நிகழ்ச்சி ) கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக,  13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அன்று முதல் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடைபெற்றது.


இதனிடையே முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் போரில் வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது .இதற்காக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட துரியோதனன் சிலையில்  கூத்து கலைஞர்களால் பீமன் துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சியிகள் தத்துரூபமாக நடைபெற்றது 


இதில் பீமன் வேடம் அணிந்தவர் பிரமாண்ட துரியோதனன் சிலையின் தொடை பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்து துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



மேலும்  மாதம் மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிப்படையவும் பொதுமக்களிடையே நாணயமும் பொறுமையும் மக்கள் மனதில் விதைக்கப்படவும் தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்பதனை உணர்த்தும் இந்த மகா பாரதம் விளங்குகிறது அதை உணர்த்தும் விதமாக ஆண்டு தோறும் எங்கள் பகுதியில் இந்த இந்த நிகழ்வு நடைபெறுவதாக  அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.



மேலும் படிக்க | கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் - இளங்கோவன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ