மறுவாக்குப்பதிவு கோரிய 43 சாவடிகளில் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது.


இந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்கப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பரிந்துரை செய்தார்.


இந்த 46 வாக்குச்சாவடிகளில், மூன்று வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே தற்போது மறுவாக்குப்பதிவு அறிவிப்பு வந்துள்ளது.


இச்சூழ்நிலையில், மறுவாக்குப்பதிவு நடக்கவிருக்கும் 3 வாக்குச்சாவடிகள் தவிர, இதர 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைசீட்டுகளை எண்ணிக் கணக்கிடுமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இந்த 43 வாக்குச்சாவடிகளில் EVM இயந்திரங்களை கணக்கில் கொள்ளாமல் ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் உள்ள ஒப்புகைசீட்டுகளை எண்ணிக் கணக்கிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


மேற்குறிப்பிட்ட 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 3 வாக்குச்சாவடிகளின் விபரம்:


  • ஈரோடு: திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் உள்ள 248-வது வாக்குச்சாவடி 

  • தேனி: ஆண்டிபட்டி வாக்குச்சாவடி எண் 67 - கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, 

  • தேனி: பெரியகுளம் வாக்குச்சாவடி எண் 197 - வடுக்கப்பட்டி சங்கரநாராயண இடைநிலைப்பள்ளி. 


இந்த மூன்று வாக்குச்சாவடிகளுடன் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மேலும் 10 வாக்குச்சாவடிகள் சேர்த்து, தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே-19 அன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதே நாள் அன்று காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.