கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகள் முடக்கம்: ED அதிரடி
முன்னால் மத்திய அமைச்சரின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முன்னால் மத்திய அமைச்சரின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது என வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தனித்தனியாக ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது புகார் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.22 கோடி சொத்தை அமலாக்கத்துறை முடக்கியது.
வரும் மக்களவை தேர்தலில் திமுக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.