Dindigul ED Raid: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது பினாமியாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களிலில் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாக  சொல்லப்படுகிறது. வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் மற்றும் பழனியில் தனியாக சிபிஎஸ்சி பள்ளியும் நடத்தி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செந்தில் பாலாஜியின் கைதுக்கு பின்னர் அவரது ஆதரவாளர் என்று சந்தேகப்பட்ட இவரது வீட்டில் தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள அவரது வீட்டிலும் தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்டத்து பங்களாவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் வேடசந்தூர் பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள அவரது வீட்டிலும் தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்டத்து பங்களாவிலும் பெண் அதிகாரி உட்பட பத்துக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று நண்பகல் 2.30 மணியளவில் தொடங்கி வீடு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முதலாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர் ஒருவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


செந்தில் பாலாஜிக்கு தொடர்பான பல இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்திய நிலையில், அவரை கடந்த மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவருக்கு இதயத்தில் ரத்தநாள அடைப்பு இருந்த காரணத்தினால், அவருக்கு தனியார் மருத்துவமனையில் திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 


தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் குணமாகி வந்த நிலையில், அவருக்கு முதலில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ளார். அவரை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மேற்முறையீடு செய்தது. இதன்மீது அங்கு விசாரணை செய்யப்பட்டது. அந்த வகையில், அந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது. 


மேலும் படிக்க | டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ