தேவர் ஜெயந்தியையொட்டி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் இந்நிகழ்வில் இடம்பெற்றிருந்தனர்.


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா, இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, பசும்பொன் கிராமத்தில் உள்ள, அவரது நினைவிடத்தில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகின்றனர்.



சென்னை, அண்ணா சாலை, நந்தனத்தில் உள்ள, தேவர் சிலை மற்றும் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள, தேவரின் சிலைக்கு, ஏராளமானோர், இன்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 


இதையடுத்து, பசும்பொன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இத்துடன், மாநிலம் முழுவதும், தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்புக்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.