பழமையும், வளமையும் கொண்ட, தனித்தியங்கும் மூத்த மொழி தமிழ் மொழி. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை தமிழ் மொழியில் இருந்து திரிந்தவை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், திராவிட இயல் ஆய்வு நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.


இந்நிகழ்ச்சியின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது... "பழமையும், வளமையும் கொண்ட, தனித்தியங்கும் மூத்த மொழி தமிழ் மொழி. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை தமிழ் மொழியில் இருந்து திரிந்தவை என்பதுதான் ஆய்வாளர்கள் முடிவு.


சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று ஆய்வாளர்கள் மெய்பித்து வரும் நிலையில் திராவிடர்களாகிய நாம் மொழியாலும், பண்பாட்டாலும், உணர்வாலும் ஒன்றுபட்டுள்ளோம்" என்றார்.


மேலும், மொழியில் மட்டும் திராவிட மாநிலங்கள் ஒற்றுமையாக இல்லாமல், விளையும் பொருட்களையும் நீரையும் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையான திராவிடத்திற்கு அடையாளம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர் தென்னக நதிகளை இணைப்புகளுக்கு தமிழகம் முழு ஆதரவினை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!