முத்து ராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு முத்து ராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது.



இவ்விழாவின் 3-வது நாளான இன்று குருபூஜை விழா நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.



இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் மணிகண்டன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், பாஸ்கரன் மற்றும் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.


பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள், காவல்துறை சூப்பிரண்டுகள் மற்றும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.