தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை யார் என்கிற போட்டி அக்கட்சியில் எழுந்துள்ளது. ரேஸில் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் இருக்கிறார். ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் தனக்கான செல்வாக்கை இழந்துவிட்டதால், தன்னுடைய இருப்பை நிலைநாட்ட கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தின் மூலம் நேற்றைய பொதுக்குழுவில் தற்காலிக நிம்மதியை பெற்றிருக்கும் அவர், அடுத்தக்கட்டமாக டெல்லி சென்று காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு


அவரைப் பொறுத்தவரை இரட்டை தலைமை என்பது நீடிக்க வேண்டும். ஒற்றைத் தலைமை என்பது கூடாது. ஏனென்றால், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கட்சிக்குள் இவருக்கு ஆதரவு இல்லை என்பது தெரிந்துவிட்டது. இதனால், ஒருங்கிணைப்பாளர் என்ற உயரிய பொறுப்பில் இருந்துவிட்டு சர்வ வல்லமை பொருந்திய பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ் அவர் செயல்பட விரும்பவில்லை. அதற்காக, டெல்லி சென்று தன்னுடைய அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு முட்டுக்கட்டைபோட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.



இது ஒருபுறம் இருக்க ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தன்னுடைய சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். கழகப் பொதுச்செயலாளர் என்ற பெயரில் முகாம் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டிருக்கும் கடிதத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை (26 ஆம் தேதி) தனது பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். டி.நகர் இல்லத்தில் இருந்து கோயம்பேடு மற்றும் திருத்தணி சென்று மீண்டும் டி.நகர் இல்லத்துக்கு திரும்புகிறார். அப்போது, அதிமுக கட்சி தொண்டர்களை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். 



இருவரின் செயல்பாட்டையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தி வருகிறார். குறிப்பாக, டெல்லி சென்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனிக்கும் அவர், அதற்கேற்ப தன்னுடைய வியூகங்களை வகுக்க தயாராக உள்ளார். தொண்டர்களையும், கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி, மேலிடத்தையும், நீதிமன்றத்தையும் எப்படி சமாளிக்கலாம் என திட்டமிட்டு வருகிறார். இதனால், அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பது உட்சக்கட்ட புதிராக உள்ளது.


மேலும் படிக்க | திமுக சந்தோஷப்பட வேண்டாம்.. உதயநிதி பட்டாபிஷேகத்தில் இதே தான் நடக்கும் - சி.வி.சண்முகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR