சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இன்று பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை நேற்று கவர்னர் தலைமையில் பொறுப்பேற்றனர். பதவி பிரமாணம் முடிந்தவுடன் நேராக பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள்  முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம்  வைத்து  மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வந்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.