பல்லடத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நேரடியாக கலந்து கொண்டு உரையாற்றிய நிலையில், அங்கு அதிமுக சார்பிலும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கள்ளிமேட்டில் மார்ச் 3 அதிமுகவின் இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வரும் மறைந்த அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் இக்கூட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பல்லடம் அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்எஸ்எம் ஆனந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாநாட்டுகாண பணிகளை பார்வையிட்டனர். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அண்மையில் பல்லடத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து ஆட்களை பாஜகவினர் திரட்டி வந்ததாக கூறினார்.


மேலும் படிக்க | பாஜக கூட்டணிக்கு செல்லும் டிடிவி தினகரன் - இடியாப்ப சிக்கலில் ஓபிஎஸ்..


அதை முறியடிக்கும் வகையில் இந்த மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு 30 ஆயிரம் பேர் வரை ஒரே தொகுதியில், அதுவும் பல்லடம் தொகுதி மக்களை மட்டும் அழைத்து நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் எடப்பாடி வியூகம் அமைத்து வருகிறார். அந்த வியூகத்தின்படி அதிமுக மற்றும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்யும் வகையில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று எம்எஸ்எம் ஆனந்தன் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பல்லடம் பகுதியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏராளமான திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டதாகவும், கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்கு செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார். எனவே எப்போது அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் எம்எஸ்எம் ஆனந்தன் தெரிவித்தார். அதிமுக வாக்குகளை குறிவைத்து பாஜக பிரச்சார கூட்டங்கள் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பாஜக கூட்டம் நடத்திய அதே பல்லடத்தில் இப்போது அதிமுக கூட்டம் நடத்துகிறது. வாக்கு வங்கியை தக்க வைக்கும் நோக்கி எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் யார் தெரியுமா? நேரு கேட்டால் ஸ்டாலின் தட்ட வாய்ப்பே இல்ல


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ