சென்னை: தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு (10th Class) பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் (K A Sengottaiyan) நேற்று அறிவித்தார். இதனையடுத்து, அவர் இன்று தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு  வரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு பேருந்து வசதிகள் செய்துத்தரப்படும் என தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "


தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மாணவர்கள் (Students) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனப் பகிர்ந்துள்ளார்.


ALSO READ: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு!


அதேபோல நேற்று, " அடுத்த மாதம் முதல்வர் அவர்களின் ஒப்புதல் பெற்று, நீட் தேர்வில் (NEET Exam) ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க 10 கல்லூரிகளில் உணவு, தங்கும் வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் படித்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனவும் நீத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அறிவித்துள்ளார். 


முன்னதாக, தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் +2, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் நாட்டில்  கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. ஏனென்றால் அன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மே 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.


ALSO READ: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்


தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகள் மட்டுமே பாக்கியிருந்ததால் அவை நடத்தி முடிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என பரவலாக பேசப்பட்டது. 
ஆனால், அரசோ அனைத்திற்கும் 10 ஆம் வகுப்பு தேர்வு அடித்தளம் என்பதால் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறி வந்தது. இந்த நிலையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார். 12 ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 


அதேபோல மார்ச் 24 ஆம் தேதி +2 தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு ஜூன் 4-ல் தேர்வு நடத்தப்படும். 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27 ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.