வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 5-ஆம் தேதி நடக்கவிருப்பதையொட்டி இன்றுடன் அரசியல்கட்சிகளின் பிரசாரம் ஓய்ந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணப்பட்டுவாடா சர்ச்சை காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஓட்டு எண்ணிக்கை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் திமுக வேட்பாளராக கதிர்ஆனந்த், அதிமுக வேட்பாளராக ஏ.சி. சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த ஒரு மாதமாக நடைப்பெற்ற பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது.


வேலூர் மக்களவைக்கான தேர்தல் வரும் 5-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்து மாலை 6 மணி முதல் ஓட்டுப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலம் நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. 


மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், ஊடகங்களில் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்படுகிறது. 


முன்னதாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக வேட்பாளர் சண்முகம் அவர்களுக்கு தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.