ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆர்.கே.நகர் தொகுதி வடசென்னையில் அமைந்துள்ளது.


இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 23-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெரும் கடைசி நாள் மார்ச் 27-ம் தேதி. ஏப்ரல் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.