லாரிகளில் ரூ 570 கோடி பணம்- தேர்தல் அதிகாரிகள் தகவல்
உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.570 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டி இருந்தபோது அந்த வழியாக வந்தா 3 கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது ரூ570 கோடி இருந்தது தெரியவந்தது. அதில் வந்தவர்களை விசாரித்த போது நாங்கள் போலீஸார் எனவும் கோவையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து விஜயவாடாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள்.
ஆவணங்கள் சரி பார்த்த பறக்கும் படை அதிகாரிகள் ஆவணங்கள் முழுமையாக சரி இல்லாததால் லாரிகளை தடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
சரியான ஆவணங்களை காட்டிய பின்னர் லாரிகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.