தமிழகத்தில் திமுக முன்னிலை... கொண்டாட்டத்தை ஆரம்பித்த தொண்டர்கள்!!
தற்போதைய நிலவரபப்டி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கிறது.
சென்னை: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பாஜகவின் தாமரை மலர்ந்து வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக தான் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியில் 37 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இரண்டு இடத்தில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதேபோல 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், திமுக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சென்னையில் திமுக அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.