Tamil Nadu Electricity Charges Explanation | வீடுகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணம் தமிழ்நாட்டில் அதிகம் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட மின் கட்டணம் கூடுதலாக தமிழ்நாடு அரசு வாங்குவதாக தெரிவித்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்தியாவிலேயே வீட்டு உபயோக மின் கட்டணம் தமிழ்நாட்டில் தான் குறைவு என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழ்நாட்டில்தான். 2023 மார்ச் திங்கள் கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்திற்கு அனைத்து வரிகள் உட்பட மும்பையில் ரூ.843, இராஜஸ்தானில் ரூ.833, மத்திய பிரதேசத்தில் ரூ.618, உத்திர பிரதேசத்தில் ரூ.693, பீகாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.685 ஆனால், தமிழ்நாட்டில் ரூ. 113 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும் விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழக அரசு வழங்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு தொகை! இவர்களுக்கு கிடைக்காது!


தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு முதன்முதலில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் 2 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் பூனிட்வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. என்றாலும், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் மற்ற மாநிலங்கள் போல் உயர்த்தப்படவில்லை.


தமிழ்நாட்டில் உள்ள அணைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 பூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113 ஆகும். இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது முல்பை 100 பூனிட்டுக்கு ரூ643 கட்டணம் வருவிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ. 643, டாடா நிருவாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சடிக் ரூ.524, மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சார கட்டணம் ரூ.486.


இராஜஸ்தான் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.833. மராட்டிய மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.668. உத்திர பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.693. பீகாரில் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.684. மேற்கு வங்க மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.854, கர்நாடக மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.631. மத்திய பிரதேசத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, ஒரிசா மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.420. சத்தீஸ்கர் மாநிலத்தில் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.431.


இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிகமிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது. இதனை திராவிட முன்னேற்ற கழகமோ, தமிழ்நாடு அரசோ, குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சர கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து அரவிந்த்வாரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் ஏழை, எளியோரின் நல வாழ்வில்செலுத்திவரும் அக்கறையும் கரிசணமும் வெள்ளிடை மலையாக விளங்குகிறது." என தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறீர்களா? தை மாதம் ரூ.2000 கிடைக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ