வால்பாறை அட்டகட்டியில் உலாவந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. அதேபோல வால்பாறை அருகே உள்ள அட்டகட்டி பகுதியில் திடீரென சாலையை கடந்த ஒற்றையானையால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தன.


இந்நிலையில் அப்பகுதியிலிருந்த வனத்துறையினர் (Forest Officials) அந்த ஒற்றையானையை சத்தம் போட்டு வனத்திற்குள் விரட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.



சமீப காலங்களில் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் காட்டுப் பகுதியைத் தாண்டி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விலங்குகளின் நடமாட்டம் மக்களை பெரும் பிரச்சனைக்கு உள்ளாகுகிறது.


விலங்குகளின் மன நிலையை, குறிப்பாக யானைகளின் மன நிலையை யாராலும் கணிக்க முடியாது. அமைதியாக இருக்கும் இவற்றுக்கு திடீரென மதம் பிடித்து விட்டால், அதன் தாக்கத்தை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இவற்றின் முன்னால் பெரிய வாகனங்களும் வருவது ஆபத்தே. 


ஆகையால், குடியிருப்புப் பகுதிகளில் யானைகளின் (Elephant) நடமாட்டம் எப்போதும் பீதியையே அளிக்கின்றது. தமிழக வனப்பகுதிகளில் நடந்துள்ள பல சம்பவங்களில் யானையின் கோவத்திற்கு ஆளாகி பல அப்பாவிகள் இறந்துள்ளதை கேள்விப்பட்டுள்ளோம்.


எனினும், இவற்றில் விலங்குகளையும் முழுமையாக குற்றம் கூற முடியாது. மிருகங்களின் இருப்பிடங்களை மனிதன் ஆட்கொண்டால் மனிதனின் இருப்பிடம் தேடி மிருகங்கள் வருவதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வெண்டும். 


இதற்கிடையில், கோவையில் பாழடைந்த குடோனில் பதிங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க 5வது நாளாக வனத்துறையினர் பொறி (கூண்டு) வைத்து காத்திருங்கின்றனர். சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை (CCTV Video) வனத்துறையினர் இன்றும் வெளியிட்டுள்ளனர்.


கோவை (Coimbatore) குனியமுத்தூர்,சுகுணாபுரம்,கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயது ஆண் சிறுத்தை கடந்த திங்கட்கிழமை சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பாழடைந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 


ALSO READ | Watch: தண்ணி காட்டும் சிறுத்தை; பாடாய் படும் வனத்துறையினர்


ALSO READ | யானைகள் வளர்ப்பு முகாமில் யானை தாக்கி பாகன் பலி!