வெளியே வந்த பிறகும் தொடரும் சிக்கல்.. சிதம்பரத்திடம் ED ஆறு மணி நேரம் விசாரணை
ஏர்பஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா செய்த ஒப்பந்தம் தொடர்பாக சிதம்பரத்திடம் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை.
புதுடில்லி: திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, முதல் முறையாக காங்கிரஸ் மூத்த தலைவரும், உள்துறை முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் (P Chidambaram) ஒரு வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா (Air India) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் சிதம்பரத்தை நாங்கள் இன்று ஆறு மணி நேரத்திற்கு மேல் விசாரித்தோம் என்று மூத்த ED அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ - UPA) அரசாங்கத்தின் போது 2009 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்திடம் இருந்து 111 விமானங்களை வாங்க திட்டமிட்டதாக நிதி புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏர் இந்தியா ஒப்பந்தத்தில் குறித்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை (ED) முதல் முறையாக கேள்வி எழுப்பியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் 106 நாட்கள் திஹார் சிறையில் கழித்த பின்னர் விடுவிக்கப்பட்ட ப.சிதம்பரம், முதல் முறையாக இந்த விவகாரத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவருக்கு வழங்கிய ஜாமீனைத் தொடர்ந்து சிதம்பரம் விடுவிக்கப்பட்டார். ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தின் பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
அமலாக்கத்துறை (Enforcement Directorate) அதிகாரி ஒருவர் கூறுகையில், ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழுவால் 2009 ஆம் ஆண்டில் ஏர்பஸில் இருந்து 43 விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.
ஏடிபஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்களை வாங்குவதற்கான திட்டம் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்பட்டபோது, விமான உற்பத்தியாளருக்கு ரூ .70,000 கோடி செலவில் ஒரு பயிற்சி மையம் மற்றும் எம்.ஆர்.ஓ (பராமரிப்பு, பழுது மற்றும் பழுதுபார்க்கும்) மையம் வழங்கப்படும் என்ற நிபந்தனை இருந்தது அமலாக்கத்துறை என்று தெரிவித்துள்ளது. ஆனால் கொள்முதல் ஒப்பந்தம் செய்யும் போது, அந்த நிபந்தனை நீக்கப்பட்டது எனவும் கூறியுள்ளது.
இந்த வழக்கில், மற்றொரு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சர் பிரபுல் படேலின் பெயரும் வெளியானது. ஏற்கனவே அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது முன்னால் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது