‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாய் அபராதம்....! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் ‘எந்திரன்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் கதை தம்முடையது எனக் கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். 


எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


இதில் சிவில் வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் கால அவகாசம் கோரிய இயக்குநர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விசாரணையை 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


இதையடுத்து, நீதிபதி நிர்மல் குமார் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளதாக, தமிழ்நாடன் தரப்பில் வாதாடப்பட்டது. இதையடுத்து இறுதி விசாரணையை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.