உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவு தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும் என நடிகர் சூர்யா அறிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “ புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் பேசாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் குறைவான ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்ட பள்ளிகளை மூடும் முடிவும் சரியல்ல. பள்ளிகளின் தரத்தை உயர்த்தமால் பள்ளிகளை மூடினால், கிராமப்புற மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல், நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்..? “ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு பலர் தன்களின் ஆதரவை தெரிவித்தனர். சிலர் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து, ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே தன்னுடைய கேள்விகளை முன்வைப்பதாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், கல்வியை பற்றி பேச தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்த போது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.