கோடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும் என்றும், அப்படி பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மீது தமிழக அரசு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து திமுக சார்பில் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.


அதன் பின்னரும் கோடநாடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி தொடர்ந்து ஸ்டாலின் பேசி வந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் மீண்டும் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு விசாரணை தடையை நீக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல்வரை தொடர்புபடுத்தி பேச வேண்டாம் என்றும் மீறி பேசினால் அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.


ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஸ்டாலின் தொடர்ந்து கோடநாடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசி வருகிறார் என தமிழக அரசு சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் இனிமேல் கொடநாடு விவகாரத்தை குறித்து யாரும் பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலினுக்கு உத்தரவு பிறப்பித்தது.