ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் சென்னையை சேர்ந்த ஆதித்யா வாசுதேவனை மீட்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சென்ற எம்பரோ எர்டா கப்பலில் பணியாற்றி வந்த 18 இந்தியர்கள் கடந்த ஜூலை 19ம் தேதி சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட 18 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த ஆதித்யா வாசுதேவன் என்பவரும் அடங்குவர். தற்போது ஈரானில் சிக்கி தவிக்கும் அவரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 


அந்த கடித்ததில் கூறியுள்ளதாவது; அதில் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் (ஜூலை) 19 ஆம் தேதி 22 பேருடன் சென்ற ‘இம்பீரோ’ என்ற இங்கிலாந்து எண்ணெய் கப்பல் ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையினரால் ‘ஹோர்முஸ்’ ஜல சந்தியில் சிறை பிடிக்கப்பட்டது. அதில் 22 ஊழியர்கள் இருந்தனர்.


அவர்களில் 18 பேர் இந்தியர்கள். இவர்களில் ஆதித்யா வாசுதேவன் (27). என்பவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையை சேர்ந்தவர். இவர் அந்த கப்பலில் 3-வது அதிகாரியாக பணிபுரிகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜாரியாவில் இருந்து ஜூபைல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு சென்று கொண்டிருந்தார். தற்போது சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர் ஈரான் புரட்சிகர படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரை விரைவில் மீட்டு, நாட்டுக்கு திரும்ப அழைத்து வருமாறு அவரது தந்தை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


எனவே தாங்கள் இதில் நேரடியாக தலையிட்டு ஆதித்யா வாசுதேவன் மற்றும் இந்திய ஊழியர்களை உடனடியாக மீட்டு அழைத்து வரும்படி கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.