ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கேஎஸ் தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அதிமுகவினர் அனைவரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ளனர். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அதிமுகவினர், திமுக ஆட்சியின் குறைகளையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் சுட்டிக்காட்டி அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Erode By-Election: OPS காலில் விழுந்து கட்சியை ஒப்படைப்பார் EPS! புகழேந்தி சவால்


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரும் கே.எஸ்.தென்னரசுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்ற அவர், அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்கக்கோரியும், அதிமுக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தவறாமல் வருமாறும் வாக்காளர்களுக்கு பூ கொடுத்து அழைப்பு விடுத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுகளை சரியாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசிய அவர், " அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு திமுக முட்டுக்கட்டை போட்டதற்கு திமுக அரசுக்கு இடைத்தேர்தலில் பதிலடி கிடைக்கும். 


எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட 2ஆயிரம் மருத்துவ கிளினிக் அதிமுக கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காகவே அவை அனைத்தையும் நிறுத்தியுள்ளனர். 1000 ரூபாய் குடும்ப தலைவிக்கு வழங்குதல், கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த எந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. 


இது எப்படி உள்ளது என்றால் வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கிறது. திமுக வாய்சொல் வீரராக மட்டுமே செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தங்கம் சுரங்கள் பூட்டப்பட்ட நிலையில் கூட தமிழகத்தில் தாலிக்கு தங்கம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


மேலும் படிக்க | Erode East By Election: ஓபிஎஸ்-ஐ அடுத்து டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ