ஜெயலலிதா ஆவி இவர்களை மன்னிக்காது - முதல்வர் நாராயணசாமி!
NR காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக-வை ஜெயலலிதா ஆவி கூட மன்னிக்காது என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்!
NR காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக-வை ஜெயலலிதா ஆவி கூட மன்னிக்காது என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்!
புதுவை 100 அடி சாலையில் உள்ள சன்வே ஓட்டலில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இககூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய்தத் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது,... "புதுவையில் நல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் பிரதமர் மோடியாலும், கவர்னர் கிரண் பேடியாலும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகிறது. வாய் திறக்காத எதிர்க்கட்சி தலைவராக ரங்கசாமி உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கி மாநில அந்தஸ்து பெறுவேன் என அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார்.
கூட்டணியின்போது அதிமுக-விற்கு அமைச்சரவையில் 2 இடம் தருவதாக உறுதி அளித்தார் ரங்கசாமி. ஆனால் வெற்றி பெற்றதும் அதிமுக-வை தூக்கி எரிந்துவிட்டு ஆட்சி அமைத்தார்.
இதன் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை துரோகி என, ஜெயலலிதா குற்றம் சாட்டினார். 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமியை மன்னிக்க மாட்டேன் என்றார். இந்நிலையில் தற்போது என்.ஆர்.காங். கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக-வை ஜெ. ஆவி கூட மன்னிக்காது. அது சந்தர்ப்பவாத கூட்டணி. ரங்கசாமிக்கு முதல்வர் பதவி வேண்டும். அதற்காக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி வருகிறார்" என கடுமையாக சாடினார்.